கோவை மாவட்டம் செட்டிபாளையம் மற்றும் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி முதல் போடிபாளையம் சாலையில் சோதனை.
மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரா சாஹூ என்பவரது மகன் பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது போல சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் இன்று சூலூர் அடுத்த காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்புவன் ஷஹானி என்பவரது மகன் ராஜபாபு சஹானி (30) மற்றும் விதேஷ்வர்சஹா என்பவரது மகன் விஜய்சஹானி(31) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேற்படி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது