BREAKING NEWS

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடிரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல், இருவர் மீது விழுந்து இருவருக்கு காயம், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக பாதிக்கபட்டவர்கள் குற்றச்சாட்டு.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடிரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல், இருவர் மீது விழுந்து இருவருக்கு காயம், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக பாதிக்கபட்டவர்கள் குற்றச்சாட்டு.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகினற்து. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, நில உரிமையாளர்களான செந்தில் குமார், மற்றும் தீபன் ரமேஷ் ஆகியோர் வந்தனர். கூட்டம் நிறைவு பெற்றதும் அங்குள்ள கை கழுவும் இடத்தில் இருவரும் கை கழுவ சென்றனர். அப்பொழுது சுவற்றில் பதிக்க பட்டு இருந்த டைல்ஸ் கல் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து இருவரது மீதும் விழுந்தது.

ஒருவருக்கு தலையிலும் ஒருவருக்கு கை பகுதியிலும் விழுந்து இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அரசு அதிகாரிகள் சில நிமிடங்களில் எதுவும் நடக்காதது போல மீண்டும் தங்களது அறைக்கு திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். இங்கு டைல்ஸ் கல் உடைந்து காயம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த டைல்ஸ் கல் பதிக்கும் பணிகளுக்கு டென்டர் விட்டு, வட மாநிலத்தவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி மேற்கொண்டதாக தெரிவித்தனர்.. சில மாதங்களிலேயே டைல்ஸ் கல் உடைந்து விழுகின்றது என்றால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளுக்கே உத்திரவாதம் இல்லாத நிலையா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

Share this…

CATEGORIES
TAGS