BREAKING NEWS

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கபட்டது.

 

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி செயலாளர் மாணிக்கவாசகம் ரெட்டி வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து கவிதா மற்றும் குழுவினர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்க தலைவர் ஜெகநாதன் ரெட்டி தலைமை உரையாற்றினார். செயலாளர் நாகராஜ் ரெட்டி செயலாளர் அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆனந்தராஜ் ரெட்டி வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், சங்கத்தின் கௌரவ ஆலோசகர் பழனிச்சாமி கூறியதாவது…
ரெட்டி இன மக்களின் ஒற்றுமை, முன்னேற்றம் பற்றியும் மற்றும் சங்க இடத்தில் கட்டிடம் கட்டுவது குறித்தும் விரிவாக விளக்கவுரையாற்றினார். சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய கௌரவ தலைவருமான ராமசாமி ரெட்டி, சமீபத்தில் தமிழக அரசால் துவக்கி வைக்கப்பட்ட அத்திக்கடவு- அவிநாசி திட்டதிற்காக, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவில் கௌரவ தலைவர்கள்
வேலுச்சாமி ரெட்டி, சுப்பையன் ரெட்டி, ஜனார்த்தனன் ரெட்டி, நாராயணசாமி ரெட்டி, சந்திரன் ரெட்டி, மற்றும் பலர், சங்கத்தின் வளர்ச்சிக்க்காக பல ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும், எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து தமிழக அரசால் 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற தனியார் மருத்துவமனையின் நிறுவனர் ஜனார்த்தனன் ரெட்டிக்கு, இச்சங்கத்தின் சார்பாக, வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த கல்வியாண்டில், 80 சதவீத விழுக்காடுக்கு மேல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது. மேலும் கல்வி கற்க கட்டணம் செலுத்த இயலாத மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆயுட்கால உறுப்பினர்கள் ஆகாதவர்கள் மகாசபை அன்று ஆயுட்கால உறுப்பினர்களாக சேரவும், சங்கத்திற்கு சொந்தமான இடத்தின் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட நிதி வசூல் செய்வது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.

CATEGORIES
TAGS