BREAKING NEWS

சங்ககிரியில் சுகாதாரமற்ற 52 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

சங்ககிரியில் சுகாதாரமற்ற 52 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 10ம் தேதி சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவை சாப்பிட்ட மாணவி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக தமிழக முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சவர்மா மற்றும் அசைவ ஓட்டல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல உணவுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவசங்ககிரி லர் கண்ணன் தலைமையில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர், சங்ககிரி புதிய, பழைய பஸ் நிலையம், பச்சகாடு குப்பனூர் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிக்கன், 5 கிலோ மீன், 2 கிலோ மட்டன், 3 கிலோ நண்டு, இறால், 1 கிலோ ரைஸ், 1 கிலோ கிரேவி என 52 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அளிக்கப்பட்டது. அவற்றில் 4 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 5 உணவு நிறுவனங்களுக்கு ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS