BREAKING NEWS

சங்ககிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி கனரக வாகனங்கள் நிறுத்தம்.

சங்ககிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி கனரக வாகனங்கள் நிறுத்தம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் கடந்த 6ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சாலையோரம் நின்று இருந்த லாரி மீது கார் மோதி விபத்தானது. இதில் டிரைவர் உட்பட 7பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டார். அதன்பேரில் சங்ககிரி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விதி மீறி சாலையோரத்தில் நிறுத்திய வாகனங்கள் மீது வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.

ஆனால் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிக்காமல்அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை பிடித்து வழக்கு போடுவதில் மட்டும் குறியாக உள்ளதால் தற்பொழுது மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சிக்கனல் போடாமல் விதி மீறி கனரக வாகனத்தை ஓட்டுனர்கள் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் மீண்டும் சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உட்கோட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS