BREAKING NEWS

சங்ககிரியில் பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்

சங்ககிரியில் பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி இராமலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிரிவு ரோடு, பழைய எடப்பாடி ரோடு , சந்தை பேட்டை , வி. என் .பாளையம், அக்கம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS