சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக சங்ககிரி நகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து கொடி அணி வகுப்பை டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சுமித்ரா, குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக சென்றனர். சங்ககிரி, பழைய பஸ் நிலையம், வி. என் பாளையம், சந்தைப்பேட்டை, பழைய எடப்பாடி சாலை வழியாக பயணியர் மாளிகையில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இத்தகைய கொடி அணி வகுப்பை நடத்தி வருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.