BREAKING NEWS

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்

என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நாம் நிலவுக்கே ராக்கெட் அனுப்பினாலும், இன்னும் ஒரு சில நபர்கள், தன்னை வளர்த்துக் கொள்ளாமல் தான் இருக்கின்றனர்.

இந்த காலத்திலும் பில்லி, சூனியம், செய்வினை இவை அனைத்தும், உண்மையென நம்பி, ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத நபரை அடக்கி வைப்பதற்காக பில்லி, சூனியம், ஏவல், வசியம் போன்றவைகளை கடந்த காலங்கள் போல் செய்து வருகின்றன. அப்படியான சம்பவம் ஒன்று தான் இங்கு நடந்திருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதையில் இருந்து தண்ணீர்தாசனூர் செல்லும் பிரதான சாலையில் ஆடு ஒன்று பலியிடப்பட்டு, அதற்கு மர்ம நபர்கள் பூஜை செய்துள்ளனர்.

செங்கனூர் பிரிவில் பழம், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றுடன் பலியிடப்பட்ட ஆட்டை மர்ம நபர்கள் பொதுவெளியில் வைத்துச் சென்றுள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவருமே பீதியில் உள்ளனர். நேற்று இரவில் இருந்தே அங்கு கிடப்பதால், பொதுமக்களும் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

Share this…

CATEGORIES