சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டு சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல், இடைப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவர் இடைப்பாடி பெரிய நாச்சியூரைச் சேர்ந்த ரேணுகா தர்சினி (27), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் நேற்று சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல், வைகுந்தம் கணக்கச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மேனகா(23), என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டு சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் மூன்று காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
ஒரே நாளில் மூன்று காதல் ஜோடிகள் சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
