சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு துவங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 714 மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளிகளுக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் முருகன், கவுன்சிலர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் புதிய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளும் இன்று துவங்கின.