சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்(52) போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி தனியார் திருமண மண்டபத்தில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி எம் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.
CATEGORIES சேலம்
TAGS சேலம்