சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 – 26 -ல் கல்வியாண்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
“பசுமையும் பாரம்பரியமும் ” என்ற தலைப்பில் தனிநபர் நடிப்பு பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் அஜய் மாநில அளவில் முதலிடம் பெற்றார். முதலிடம் பிடித்த அஜயை பள்ளி தலைமை ஆசிரியை தெய்வ பிரியா, பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
CATEGORIES தென்காசி
