சமூக சேவகர்கள் நலச்சங்கம் சார்பாக நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்
ஈரோட்டில் கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஈரோடு முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் சார்பாக நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இருநூற்றும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பலர் தங்களின் குடும்பங்களை இழந்து உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் ஈரோடு முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் சார்பில் 60 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது.தொடர்ந்து இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா அவர்களை நேரில் சந்தித்து வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினர்.இவர்களின் இச்செயலை பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.