சாத்கர் மலைப்பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல்கள் அழிப்பு:
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவிலக்கு சோதனை நடத்தினர். இதில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் ஊறல்களுக்கு பயன்படுத்தக்கூடிய வெல்லம் 100 கிலோ பறிமுதல் செய்து கண்மணி, வெங்கடேசன், ஜெகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அல்லேரி மலை, மாமரத்து கொல்லை ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டு 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறி