சாத்தூர் நகராட்சி குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் லிட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி நடத்தும் மாபெரும் ஓவியப் போட்டி.
சாத்தூர் நகராட்சி- தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை-என் பொறுப்பு-
இன்று (14-10-2022) நகர்மன்ற தலைவர் அவர்களது தலைமையில், ஆணையாளர் அவர்களது முன்னிலையில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, லிட்டில் பட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி,
விழிப்புணர்வு வாசகங்கள் தயாரித்தல் போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவப்படுத்தும் விதமாக பரிசளிப்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், அகராதி (Dictionary) மற்றும் ஸ்கெட்ச் பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.