சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சாலியமங்களத்தில் அரவிந்த் செராமிக்ஸ் எனும் டைல்ஸ் தயாரிப்பு புதிய தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அரவிந்த் குரூப் நிர்வாக இயக்குனர் அனுஷ்பாபு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி செழியன், எஸ். கல்யாணசுந்தரம் எம்பி, அம்மாபேட்டை ஒன்றியக் குழு தலைவர் கே. வீ கலைச்செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார் மற்றும் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அரவிந்த் செராமிக்ஸ் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
எஸ். மனோகரன்
பாபநாசம்