BREAKING NEWS

சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

 

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். சிதம்பரம் நாடாளுமன்ற த்தில், 7,53,643 ஆண் வாக்காளர்களும், 7, 66,118 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1709 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை நேற்று செலுத்தினர்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 288 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அவ்வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 5 வாக்குச்சாவடிகள் அடையாளப்படுத்தப்பட்டு வெப் கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் கொண்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.

காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருகை தந்து வாக்கினை செலுத்தினர். தேர்தல் ஆணையம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. வாக்கு பதிவு முடிந்த பிறகு, கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் இன்று தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் சீல் வைக்கப்பட்டது.

. கல்லூரியில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகள், பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், அதிமுக சார்பில் பாஸ்கர், மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

அந்த அறைகளில் 24 மணி நேர வெப்கேமரா கண்காணிப்பும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இக்கல்லூரி முழுவதும் வெப்கேமரா கண்காணிப்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு, உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க, வேட்பாளர்களின் முகவர்களுக்கு, கல்லூரியில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு சிசிடி கேமராக்களின் பதிவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்க ப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்கும் ஆகியோர் மற்றும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS