BREAKING NEWS

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள், பெரிய கல் உருளைகளை கயிறு கட்டி அலகு காவடி எடுத்து வந்து பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்:-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வழுவூரில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி உற்சவம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து காவடி புறப்பாடு நடைபெற்றது பால்காவடி பன்னீர் காவடி அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை செண்டை மேளங்கள் நையாண்டி மேளங்கள் முழங்க பக்தர்கள் எடுத்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக லோடு வேன்களில் அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலைகளை வைத்து முதுகில் அலகு குத்தி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எடுத்து வந்தனர். இதுபோல் பெரிய கல் உருளைகளை கயிறு கொண்டு முதுகில் குத்திய அலகின் மூலம் பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர் நான்கு ரத வீதிகள் வழியாக பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தை பால்குடம் ஊர்வலம் வந்தடைந்ததும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS