BREAKING NEWS

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்   குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு  கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நல்லாத்தூர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தின்  டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதாவும் ஏற்கனவே அப்பகுதியில் ஜியோ டவர் அமைத்ததினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைவரும் கதிர்வீச்சால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து புதிதாக குடியிருப்பு பகுதியில் மற்றொரு செல்போன் டவர் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதால்
50 மேற்ப்பட்ட பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்யிடம் புகார் மனு அளித்துள்ளனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள் சினிமா பாணியில் கூறுகையில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் எங்களுடைய உடல்நிலை மெலிவுக்கு காரணமே ஏற்கனவே எங்கள் குடியிருப்பு பகுதியில் ஜியோ டவர் அமைத்து இருப்பதாகவும் அதனால் எங்கள் பகுதியில் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் அதிக அளவில் பாதிப்புப்படுவதாக புதிதாக ஏர்டெல் டவர் அமைப்பதற்கான கட்டுமான வேலைகளை நடைபெற்று வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

CATEGORIES
TAGS