சினிமா
அனிருத்துக்கு சிபாரிசு செய்கிறாரா சமந்தா?

தான் நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்துக்கு அனிருத்தை இசை அமைப்பாளராக நியமிக்கும்படி நடிகை சமந்தா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
’காத்துவாக்கு ரெண்டு காதல்’, சகுந்தலம் படங்களில் நடித்துள்ள, அடுத்து `யசோதா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இதற்காக ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஆங்கில படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கும் சமந்தா, அடுத்து தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்குகிறார். மைத்ரி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ரொமான்டிக் படமான இதற்கு அனிருத் ரவிச்சந்தர்தான் இசை அமைக்க வேண்டும் என்று சமந்தா, தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், விஜய் தேவரகொண்டா, இசை அமைப்பாளர் கோபி சுந்தருடன் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றி இருப்பதால் அவர்தான் இசை அமைக்க வேண்டும் என்கிறாராம். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
