சினிமா
அஜித்தோட முதல் பான் இந்தியா படமா வலிமை இருக்கும்… போனிகபூர் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க.
சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.
நடிகர் அஜித்குமார், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித், இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் இணைந்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத குறையை தற்போது வலிமை படம் மிகச்சிறப்பாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் சென்டிமெண்டிற்கும் குறைவில்லாமல் இருக்கும் என்றும் கூறலாம். படத்திலிருந்து வெளியான அம்மா பாடல் இதை உறுதி செய்துள்ளது.
இதேபோல, டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும் அஜித் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு தினந்தோறும் வலிமை படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படம் அஜித்தின் முதல் பான் இந்தியா படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். வலிமை போன்ற பிரம்மாண்டமான படத்தை இந்த கொரோனா சமயத்தில் எடுத்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அஜித் மிகவும் நேர்மையான, திறமையான நடிகர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல இயக்குநர் எச் வினோத்தும் அர்ப்பணிப்புடன் தனது பணியை செய்பவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இவர்கள் இருவருடைய கூட்டணி படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.