BREAKING NEWS

சினிமா

ஸ்பெயின் செல்கிறது விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டீம்.

ஸ்பெயின் செல்கிறது விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டீம்

நடிகர் விஜய் ஆண்டனி, இப்போது ‘ரத்தம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘தமிழ் படம்’, ’தமிழ் படம் 2’ படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், இந்தப் படத்தை இயக்குகிறார். இதில், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

சி.எஸ்.அமுதன்

சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் நடந்து வந்தது. அங்குள்ள புகழ்பெற்ற ஹவுரா பாலத்திலும் மேலும் சில முக்கிய பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. அத்துடன் அந்த ஷெட்யூல் முடிந்துவிட்டதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஸ்பெயினுக்குச் செல்ல இருக்கிறது படக்குழு. அங்கு முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )