BREAKING NEWS

சினிமா

‘நான் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன?’

ரசிகரிடம் சீறிய ஸ்ருதி ஹாசன்.
‘நான் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன?’
சமூக வலைதளங்களின் வளர்ச்சியானது, திரைப் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்திருக்கிறது எனலாம். குறிப்பிட்ட இடைவெளியில் ரசிகர்களுடன் பிரபலங்களும் கேள்வி – பதில் மூலம் உரையாடியும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர் கேட்ட ஒரு கேள்வியால் அவர் கடும் கோபமடைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தனது காதலர் சாந்தனுவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ருதி ஹாசன். பிறந்தநாள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவந்தார். ரசிகர்களும் இந்த ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இதற்கடுத்து, ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி – பதில் மூலம் உரையாடி உள்ளார். அதில் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர்.

அதில் ரசிகர் ஒருவர் ஸ்ருதியிடம், “இதுவரை நீங்கள் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள்?” என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வி ஸ்ருதியைக் கோபப்படுத்தி இருக்கிறது என்பதை அவரது பதிலில் இருந்து அறிய முடிகிறது. இதற்கு வீடியோ மூலம் பதிலளித்த ஸ்ருதி, “நான் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தால் உங்களுக்கு என்ன? அதைக் கேட்க வேண்டும் என்ற எந்த அவசியமும் உங்களுக்கு இல்லை. ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். மூக்கு பகுதியில் மட்டுமே இதுவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன்” என பதிலளித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2021-ல் வெளிவந்த ‘லாபம்’ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அவரது நடிப்பில் ‘சலார்’ படம் வெளியாக உள்ளது. இது தவிர்த்து ஓடிடி படைப்புகளிலும் இசைத் துறையிலும் அவர் கவனம் செலுத்திவருகிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )