BREAKING NEWS

சினிமா

துல்கர் படத்தில் காஷ்மீர் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா.

துல்கர் படத்தில் காஷ்மீர் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா

துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காஷ்மீர் பெண்ணாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக, ராம் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இதில் இணைந்துள்ளார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் அவர் காஷ்மீரைச் சேர்ந்த அஃப்ரீன் என்ற பெண்ணாக நடிக்கிறார்.

தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் பகுதியில் அவர் சிவப்பு நிற ஹிஜாப் மற்றும் கைப்பை அணிந்தபடி, தீவிரமாக நடந்து செல்லும் காட்சி வரவேற்பைப் பெற்றுள்ளது. வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )