BREAKING NEWS

சினிமா

ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இணைந்தார் நயன்தாரா.

ஷாருக்கான் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க நடிகை நயன்தாரா மும்பை சென்றுள்ளார்.

ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், அட்லீ. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா, ஷாருக்கான்

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புணேவில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக்கான், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மும்பையில் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த படப்பிடிப்பில் ஷாருக்கான் முகத்தில் துணியை கட்டியபடி, ஆம்புலன்ஸ் வேன் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை நயன்தாரா மும்பை சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )