சினிமா
ஆஜராக சொன்ன போலீஸ்… நடிகை காவ்யா மாதவன் அனுப்பிய அதிரடி பதில்.

“சென்னையில் இருப்பதால் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது” என்று குற்றப்பிரிவு போலீஸாரிடம் நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் தன்னால் விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது என்று காவ்யா மாதவன் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
தான் சென்னையில் இருப்பதால் 11-ம் தேதி ஆஜராக முடியாது என்றும் 13-ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பியுள்ள தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
