BREAKING NEWS

சினிமா

பாலா படத்துக்காக கட்டப்பட்ட வீடுகள்; சூர்யா புது திட்டம்.

பாலா படத்துக்காக கட்டப்பட்ட வீடுகள்; சூர்யா புது திட்டம்

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங், கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் நடந்து வருகிறது.

’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து சூர்யா, நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் மீண்டும் இணைகின்றனர். சூர்யாவின் 41-வது படமான இதை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இப்போது அங்கு நடுக்கடலில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

படத்துக்காக, கன்னியாகுமரி அருகே மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )