BREAKING NEWS

சினிமா

பிரபல நடிகை திருமணம்: தனி விமானத்தில் செல்லும் ஆர்ஆர்ஆர் டீம்!

பிரபல நடிகை திருமணம்: தனி விமானத்தில் செல்லும் ஆர்ஆர்ஆர் டீம்!

பிரபல நடிகையின் திருமணத்துக்காக, ஆர்ஆர்ஆர் பட குழு தனி விமானத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம், ’ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியா பட் உட்பட பலர் நடித்த இந்த பான் இந்தியா படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தானய்யா தயாரித்த இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மரகதமணி இசை அமைத்துள்ளார்.

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் உலகம் முழுவதும் எட்டியிருப்பதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஆலியா பட் – இந்தி நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் வரும் 14-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடக்கிறது. நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக ’ஆர்ஆர்ஆர்’ இயக்குநர் ராஜமவுலி, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் மும்பை செல்கின்றனர். இதற்காக தனி விமானத்தை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )