BREAKING NEWS

சினிமா

தமிழ்ராக்கர்ஸில் லீக் ஆனது `கே.ஜி.எஃப் 2’: படக்குழு அதிர்ச்சி.

தமிழ்ராக்கர்ஸில் லீக் ஆனது `கே.ஜி.எஃப் 2’: படக்குழு அதிர்ச்சி

 

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் ’கே.ஜி.எஃப் சாப்டர் 2’ படம் திருட்டுத்தனமாக லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்தப் பட படத்தில் நாயகனாக யாஷ் நடிக்க, அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, தமிழில் இதை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படம் திருட்டு இணையதளங்களில் வெளியாகி உள்ளது. நேற்று வெளியான விஜய்யின் ’பீஸ்ட்’ படம், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியான நிலையில், கே.ஜி.எப் 2 படம் இன்று தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணைய தளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )