BREAKING NEWS

சினிமா

தெலுங்கு படத்தை தொடங்கி வைத்த நடிகர் தனுஷ்.

தெலுங்கு படத்தை தொடங்கி வைத்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தெலுங்கு படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் ’நானே வருவேன்’ படத்தை முடித்துள்ள நடிகர் தனுஷ், ’வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. வெங்கி அட்லுரி இயக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார்.

ஸ்ரேயா, சாய்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் மருமகன் ஆசிஷ் ஹீரோவாக நடிக்கும் படம், செல்ஃபிஷ். ’ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தில் அறிமுகமான அவருக்கு இது இரண்டாவது படம்.

இந்தப் படத்தை ’புஷ்பா’ இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷால் காசி இயக்குகிறார். சுகுமார், தில்ராஜூ இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்கவிழா ஐதராபாத்தில் இன்று நடந்தது. நடிகர் தனுஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் அனில் ரவிபுடி, ஹரிஷ் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )