BREAKING NEWS

சினிமா

வலிமை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இன்று அனைத்து திரை அரங்குகளில் வெளியானது.

வலிமை படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இன்று திரையரங்குகளில் காண சென்றனர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியாவதால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர் இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மீது காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கோவையில் உள்ள கங்கா திரை அரங்கில் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர் இதனால் கங்கா திரையரங்கம் பரபரப்புடன் காணப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )