BREAKING NEWS

சினிமா

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’: போனி கபூர் வெளியிட்ட அப்டேட்.


உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’: போனி கபூர் வெளியிட்ட அப்டேட்

 

ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஹ்வா, நாசர், இஷா தல்வார் நடித்து இந்தியில் வெளியான படம், ’ஆர்டிகிள் 15’. அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை ’நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படம் மே மாதம் 20-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )