BREAKING NEWS

சினிமா

‘பட்டாம்பூச்சி’ படத்தில் சைக்கோ கொலைகாரனாக வில்லன் வேடத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ளார்.

நீதிபதி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகர் ஜெய்.. அபராதத்தோடு,  லைசென்சும் 'கட்'! | Saidapet Court canceled Actor jai's driving license for  six months - Tamil Oneindia

நடிகர் ஜெய் நடித்த ’வீரபாண்டியபுரம்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதையடுத்து சுந்தர். சி, சுசீந்திரன் இயக்கும் படங்கள் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் நடித்துள்ள ’பட்டாம்பூச்சி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இதை பத்ரி இயக்குகிறார். இவர், ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு உட்பட சில படங்களை இயக்கியவர்.

ஜெய், சுந்தர்.சி

இதில் ஜெய் கொடூர வில்லனாக நடிக்கிறார். சைக்கோ கொலைகாரனாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர். சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இருவருக்குமான கண்ணாமூச்சி ஆட்டம்தான் படம். நவ்னீத் சுந்தர் இசை அமைத்துள்ளார். குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது. கரோனாவால் தள்ளிப் போன இந்தப் படம், மே 13-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

இதற்கிடையே சுந்தர். சி இயக்கும் மற்றொரு படத்தில் ஜெய் நடிக்கிறார். இதில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஊட்டியில் கடந்த மாதம் தொடங்கியது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )