சினிமா
தல அஜித்தின் வலிமை படம் வெளியீடு – அதிகாலை முதலே ரசிகர்கள் வெடி வெடித்து தாரை தப்பட்டை முழங்க உற்சாக கொண்டாட்டம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து தமிழகம் முழுவதும் திரையரங்கு மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தளர்வுகளுடன் திரையரங்கம் திறக்கப்பட்டலும் பிரபல நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியிடப்படவில்லை. சூர்யா நடித்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் விஜய், அஜித் ஆகிய ராசிகளில் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டாம் என அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததால் கடந்த இரண்டு வருடமாக அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியிடப்பட வில்லை.
இந்நிலையில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று காரணமாக திரைப்படம் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் 100% திறக்கப்பட்ட நிலையில் இன்று தமிழகம் முழுவதும் தல அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளிவந்தது. இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கில் குவிய தொடங்கினர். அப்போது தாரை தப்பட்டை முழங்க, செண்டை மேளம் தெரிக்க முழங்க, ஆடலுடன் வெடி வெடித்து உற்சாகமாக படத்தை காணச்சென்றனர்.