BREAKING NEWS

சினிமா

ட்ரீம் வாரியாரின் `கைதி’ படம் இந்தியில் `போலா’ என்ற பெயரில் வெளியாகிறது.

`கைதி' படத்தின் இந்தி ரீமேக் `போலா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படம் அடுத்தாண்டு மார்ச் 30-ம் தேதி ரிலீசாகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார். இப்படம் டைகார்ட், விருமாண்டி‌ படங்களில் இருந்தும் இன்னும் சில படங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த `கைதி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தின் ஆரம்ப ஷூட்டிங் இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ரீமேக் படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்கியுள்ளார். அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்துக்கு போலா (Bholaa) என்று பெயரை படக்குழு வைத்துள்ளது. அசீம் பஜாஜ் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ரிலீசாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )