சினிமா
பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, நடிகர் அக்ஷய்குமார் மன்னிப்பு.

பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் தமிழில், ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் பான் மசாலா விளம்பரத்தில் அஜய்தேவ்கன், ஷாருக்கான் ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த விளம்பரத்துக்காக கடந்த சில நாட்களாக, அவரை ரசிகர்களும் நெட்டிசன்களும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் எதிர்ப்பு அதிகமானதால், அந்த பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized
