சினிமா
பள்ளிக்கூடங்கள் வெறும் கட்டிடமட்டுமல்ல; அங்கு நம் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது:
சிறந்த பள்ளிகள்தான், சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடங்கள் வெறும் கட்டிடமட்டுமல்ல. அங்க நம் நாட்டோட எதிர்காலம் தீர்மானிக்கப்படுது. அரசு பள்ளிகள்ல பல லட்சம் மாணவர்கள் படிக்கிறாங்க. அதுல பெரும்பாலானவங்க முதல் தலைமுறை மாணவர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொறுப்புமிக்கக் கல்வியாளர்கள்னு இந்த மூணு தரப்பும் ஒண்ணா சேர்ந்தா சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தைத் தர முடியும். மகிழ்ச்சியான கல்விச் சூழலை தரவேண்டியது நம் எல்லோருடைய பொறுப்பு.
அரசு பள்ளிகள்ல, பள்ளி மேலாண்மைக் குழுவுல மறு கட்டமைப்பு செய்து தமிழக அரசு. மாணவர்களுடைய எதிர்காலத்து மேல அக்கறை இருக்கிற, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்னு பல தரப்பினர் இந்தக் குழுவுல இருக்க போறாங்க. இந்த நல்ல மாற்றத்தின் மூலமா ஆக்கப்பூர்வமான முயற்சி எடுக்குது, பள்ளிக் கல்வித்துறை. பள்ளியைச் சுற்றி இருக்கிற எல்லா பிள்ளைகளையும் படிக்க வைக்கறதும் படிப்பை பாதியில நிறுத்தின மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கிறதும், இந்தக் குழுவோட முக்கியமான வேலை. அதுமட்டுமில்லாம மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படற மாணவர்களுக்கானச் சூழலும் வசதியும் இருக்காங்கறதையும் உறுதி செய்வாங்க.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.