சினிமா
என் மவுனத்தை அறியாமை என நினைக்க வேண்டாம் என்ற நடிகை சமந்தாவின் ட்வீட்.

என் மவுனத்தை அறியாமை என நினைக்க வேண்டாம் என்ற நடிகை சமந்தாவின் ட்வீட், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார், சமந்தா. அவர், விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. அடுத்து சாகுந்தலம் படத்தை முடித்துள்ள அவர், யசோதா படத்தில் நடித்துவருகிறார். பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.
இந்நிலையில் நடிகை சமந்தா பதிவிட்ட எச்சரிக்கை ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில், “என் மவுனத்தை அறியாமை என்றும் என் அமைதியை ஏற்றுக் கொள்வது என்றும் என் அன்பை பலவீனம் என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். என் கருணைக்கும் எக்ஸ்பயரி தேதி இருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized
