BREAKING NEWS

சினிமா

பிரபாஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பான் இந்தியா நட்சத்திரமான பிரபாஸ், ஓம் ராவத் இயக்கும் ‘ஆதிபுருஷ்’, பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ’நடிகையர் திலகம்’ நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’புராஜக்ட் கே’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

பிரபாஸ், அமிதாப், தீபிகா படுகோன்

சயின்ஸ் பிக்சன் படமான இதில், பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில், அமிதாப்புடன் நடிக்கும் கனவு நனவாகிவிட்டதாகக் கூறியிருந்தார் பிரபாஸ். நடிகர் அமிதாப், பிரபாஸின் விருந்தோம்பலைப் பாராட்டி இருந்தார்.

“பாகுபலி பிரபாஸ், உங்கள் பெருந்தன்மைக்கு அளவே இல்லை. எனக்கு வீட்டில் சமைத்த, சுவையான உணவுகளைக் கொண்டு வருகிறீர்கள். தேவையான அளவைத் தாண்டி அனுப்புகிறீர்கள். அதைக் கொண்டு ஒரு ராணுவத்துக்கே உணவளித்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி இன்னொரு ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில், திஷா பதானி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )