சினிமா
தல அஜித்துடன் இணையும் சார் பட்டா வேம்புலி..
தல அஜித் நடித்து வரும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சார்பாட்டா பரம்பரை புகழ் வேம்புலி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் “அஜித் 61’. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், ஒரு நாயகியாக மஞ்சு வாரியார் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கேரக்டரில் அனைவரையும் பிரமிக்க வைத்த ஜான் கொகேன் என்பவரும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.