BREAKING NEWS

சினிமா

பிடித்தவர்களுக்கு நன்றி, பிடிக்காதவர்களுக்கு?: ட்விஸ்ட் வைத்த நடிகர் அஷ்வின்.

பிடித்தவர்களுக்கு நன்றி, பிடிக்காதவர்களுக்கு?: ட்விஸ்ட் வைத்த நடிகர் அஷ்வின்

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் அஷ்வின். ‘ரெட்டை வால் குருவி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற அவரது படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அஷ்வின் தனது 31-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளுக்கான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்கள் காமன் டிபி, வாழ்த்து தெரிவிப்பது, வீடியோ என தங்களது அன்பை வெளிப்படுத்தி வந்தனர். ரசிகர்களின் இந்த அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஷ்வின் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லைவ்’ வந்தார்.

அதில், ” உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. நான் எந்தவொரு சின்ன விஷயம் செய்தாலும் அதைக் கொண்டாடும் உங்களுக்கு நன்றி சொல்ல எந்த சரியான வார்த்தையும் என்னால் யோசிக்க கூட முடிவதில்லை. பல சமயங்களில் இந்த அன்புக்கு நான் தகுதியானவனா என்பதை பலமுறை யோசித்திருக்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவருடைய நேரமும் முக்கியமானது. அதை எனக்காக தருகிறீர்கள் எனும்போது அதை நிச்சயம் எனதாக்கி கொள்வேன். எனக்கு நீங்கள் அன்பு தரும் அந்த நல்ல மனதுக்கு உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும்” என்று கூறினார்.

Ashwin Kumar apologizes after his controversial speech | Tamil Movie News -  Times of India

மேலும் “நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களைக் கருத்தில் கொண்டே எடுக்கிறேன், பேசுகிறேன். முதலில் நான் ஒரு ஆடியன்ஸ். உங்கள் அன்பினால் மட்டுமே நான் உழைப்பைக் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னைப் பிடித்தவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நன்றி. என்னைப் பிடிக்காதவர்கள் இருந்தால் உங்களுக்கும் என்னைப் பிடிக்க வைக்கும்படியாக நிச்சயம் என் உழைப்பைக் கொடுத்து படங்கள் செய்வேன். எல்லாருக்கும் என்னால் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த ‘லைவ்’. அனைவருக்கும் நன்றி” என அஷ்வின் பேசியுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )