BREAKING NEWS

சினிமா

கிச்சா சுதீப் நடிக்கும் படத்தின் வெளிநாட்டு உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பெரும் தொகைக்கு விலை போன சுதீப்பின் ’விக்ராந்த் ரோணா’!

சுதீப், நிரூப் பண்டாரி, ரவிசங்கர் கவுடா, மதுசூதன் ராவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை, நடிகர் சுதீப்,திரையுலகுக்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ளார், ஷாலினி ஆர்ட்ஸ் ஜாக் மஞ்சுநாத்.

3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூலை 28 அன்று வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்தை ஒன் டிவெண்டி 8 மீடியா (One Twenty 8 media) நிறுவனம் பெரும் தொகைக்கு பெற்றுள்ளது. ஒரு கன்னடப் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய விலையைப் பெற்றது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறுகையில், “இப்படத்தின் கதை உலகளாவியது என்பதை நம்புகிறேன். இப்படத்தின் விற்பனை ‘இது ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சத்தை தாண்டியதோடு, மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இணையாக உள்ளது” என்றார். ஆனால், எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )