BREAKING NEWS

சினிமா

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்தது. சில நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்தது. ஃபேமிலி சென்டிமென்ட்டை மையமாக கொண்டு இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்குத் தந்தையாக நடிக்கிறார் என்றும் நடிகர் ஷாம், விஜய்க்கு சகோதரராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, இந்தப் படம் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )