BREAKING NEWS

சினிமா

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

Dhanush filmography - Wikipedia

மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ படத்திற்கு பிறகு தனுஷின் படம் இதுவரை தியேட்டரில் வெளியாகவில்லை. அவர் நடித்த அட்ரங்கி ரே, ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாயின. இந்நிலையில் அவர் நடித்துள்ள ’திருச்சிற்றம்பலம்’ படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

தனுஷ் நடித்த குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர், மித்ரன் ஜவஹர். இவர் தனுஷ் நடிப்பில் அடுத்து இயக்கியுள்ள படம், ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

மற்றும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ததால், திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தப் படம் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )