BREAKING NEWS

சினிமா

மோசடி மன்னன், மோன்சன் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல நடிகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். ஆயுர்வேத மருத்துவர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர், நடிகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், தனது இல்லத்தில் பழமை வாய்ந்த பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். இதை மையமாக வைத்து பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

திப்பு சுல்தானின் கிரீடம் முதல், இயேசு அணிந்த உடை வரை தன்னிடம் இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்துள்ளார். புருனே சுல்தான் கிரீடத்தை விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி வர உள்ளதால், அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி, ரூ.10 கோடி மோசடி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் இருக்கிறார்.
மோன்சன், மோகன்லால்

இவர் வீட்டுக்கு திரை நட்சத்திரங்கள் உட்பட பல விஐபிகள் வந்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இவருடைய கலூர் வீட்டுக்குச் சென்றுள்ளார். மோன்சனுக்கு வேண்டிய நடிகர் ஒருவர், மோகன்லாலை இங்கு அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க, அடுத்த வாரம் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுமட்டுமின்றி மற்றொரு வழக்கிலும் நடிகர் மோகன்லாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )