BREAKING NEWS

சினிமா

விஜய் – வெற்றிமாறன் படம் எப்போது ? வெளியான சூப்பர் தகவல்.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் செம வைரலானது.

இதைத்தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்யை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் என்ற தகவல் வந்துள்ளது. தமிழ் மட்டும் தெலுங்கில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. வெற்றிமாறன் விஜய்யை சந்தித்து கதை சொல்லியதாகவும் அக்கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வந்தன.

அதன் பின் அதைப்பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இப்படத்தைப்பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” நடிகர் விஜய்யும், இயக்குனர் வெற்றிமாறனும் அவரவர் பணிகளில் தற்போது பிஸியாக உள்ளனர். இவர்கள் இருவரின் நேரமும் ஒத்துப்போனால் கண்டிப்பாக இப்படம் விரைவில் துவங்கும்.எல்லாத்துக்கும் டைமிங் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசலை இயக்கவுள்ளார். நடிகர் விஜய்யும் தற்போது தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இவ்விருவரும் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு விரைவில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )