சினிமா
மீண்டும் தொடங்குகிறது சசிகுமாரின் ‘நா நா’ ஷூட்டிங்.

கரோனா காரணமாக தடைப்பட்டிருந்த ‘நா நா’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருக்கிறது.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கும் படம், ’நா நா’. இதை, நிர்மல்குமார் இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த ’சலீம்’, அரவிந்தசாமி நடித்த ’சதுரங்க வேட்டை 2’ படங்களை இயக்கியவர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார்.

இதில் சரத்குமார், சசிகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத், மும்பை உள்பட பல இடங்களில் நடைபெற்றது. கரோனா காரணமாக தடைப்பட்ட இதன் படப்பிடிப்பு, இப்போது மீண்டும் தொடங்க இருக்கிறது. மற்ற படங்களில் பிசியாக இருக்கும் சசிகுமார், இந்தப் படத்துக்காக, தனது கெட்டப்பை மாற்ற வேண்டும். அதனால் படத்தின் டீம் அவருக்காகக் காத்திருக்கிறது.

“முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும். சசிகுமார் வந்ததும் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டு விடும். இது மிரட்டலான ஆக்ஷன் படமாக இருக்கும்” என்கிறது படக்குழு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
