BREAKING NEWS

சினிமா

அஜித் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்?

அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த `வலிமை’ படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. போனி கபூர் தயாரித்திருந்த இந்தப் படத்தை, ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தி நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடித்திருந்தார்.

கார்த்திகேயா, சுமித்ரா உட்பட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இதை அடுத்தும் அஜித் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது. இந்தப் படம் முடிந்ததும் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கமர்சியல் படமாக உருவாக இருக்கும் இதை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

அஜித், நயன்தாரா இணைந்து கடைசியாக ’விஸ்வாசம்’ படத்தில் இணைந்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட். இதையடுத்து மீண்டும் இந்த ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )