சினிமா
’பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடல்.
’பேட்டரி’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடல் காட்சி குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் படம் ’பேட்டரி’. நாயகனாக செங்குட்டுவனும், நாயகியாக அம்மு அபிராமியும் நடிக்கின்றனர்.
மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை, அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன் காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், ஏற்க மறுத்துவிடுகிறார்.
அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாகப் பாடுவது காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, நெல்லை ஜெயந்தா எழுதிய பாடலை ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ளார். ’நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே/
என்னில் ஏதோ ஆனது நீதானே/ காதலே நீதானே/
பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா/ என்று தொடங்கும் பாடலை
சித்தார்த் விபின் இசையமையில் பாடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடன் சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளார்.
மணிபாரதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் பாடல், குலுமணாலியில் படமாக்கப்பட்டது. மே மாதம் படம் திரைக்கு வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.