BREAKING NEWS

சினிமா

ரஜினி படத்தில் நடிக்கிறாரா?- பிரியங்கா தரப்பில் மறுப்பு.

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை பிரியாங்கா அருள் மோகன் தரப்பு மறுத்துள்ளது.

விஜய் நடிப்பில் ’பீஸ்ட்’ படத்தை இயக்கி முடித்துள்ளார், நெல்சன் திலீப்குமார், இதில் விஜய் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், இரண்டாவது பாடல் வரும் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார். ரஜினியின் 169-வது படமான இதையும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கான ஓபனிங் பாடலை எழுதி, சின்ன கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் மகளாக நடிக்க, பிரியங்கா அருள் மோகனிடம் பேசி வருவதாகவும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் செய்தி வெளியானது. ஆனால், பிரியங்கா தரப்பில் இதை மறுத்துள்ளனர். அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )